Thursday, 9 August 2018

கலைஞருக்கு தலைவர்கள், பிரபலங்கள் அஞ்சலி


சென்னை-
திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் நல்லுடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.

கலைஞரின் உடல் மீது மூவண்ண தேசியக் கொடி போர்த்தப்பட்டு முழு அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது.
கலைஞரின் நல்லுடலுக்கு  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக ஆளுநர்  பன்வாரிலால்  புரோஹிட் ஆகியோருடன் நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகுமார், பிரபு, அஜித்குமார், நடிகை சரோஜா தேவி உட்பட பல்வேறு பிரபலங்கள், தொழிலதிபர்கள், தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment