Monday 13 August 2018

கட்டட நிர்மாணிப்புப் பொருட்களுக்கு எஸ்எஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படலாம்- நிதியமைச்சர்


கோலாலம்பூர்-
அடுத்த மாதம் அமல்படுத்தப்படவுள்ள விற்பனை, சேவை வரியிருந்து (எஸ்எஸ்டி) நிர்மாணிப்புப் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.

கட்டட நிர்மாணிப்புக்கு தேவையான மணல், சிமெண்ட், கம்பி ஆகியவற்றுக்கு எஸ்எஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படலாம் என அவர் சொன்னார்.

கடந்த தேசிய முன்னணி ஆட்சியின்போது அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரிக்கு பதிலாக எஸ்எஸ்டி வரி அமல்படுத்தப்படவுள்ளது.


No comments:

Post a Comment