Friday 10 August 2018

தேமு ஆட்சியில் 4 கட்சிகளுக்கு நிலங்கள் ஒதுக்கீடு- அதிகார அத்துமீறலா?

ரா.தங்கமணி
ஈப்போ-
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையில் பேரா மாநில அரசாங்கம் அங்கீகரித்துள்ள 461,026.674 ஹெக்டர் நிலங்களில் 4 அரசியல் கட்சிகள் நிலங்களை பெற்றுள்ளன என்றுகெராஞ்சி சட்டமன்ற உறுப்பினர் சோங் ஸெமின் கூறினார்.

கடந்த தேசிய முன்னணி ஆட்சியில் 4 பிரதான கட்சிகள் ஆயிரக்கணக்கிலான நிலங்களை பெற்றுள்ளன.

அம்னோ கட்சி  28,709.940 சதுரஅடி மீட்டர் நிலங்களையும் மசீச கட்சி 2,014.352 சதுரஅடி மீட்டர் நிலங்களையும் கெராக்கான் கட்சி 6,952.622சதுரஅடி நிலங்களையும் பாஸ் கட்சி 16.364.000 சதுரஅடி நிலங்களையும் பெற்றுள்ளன.
விவசாயம் செய்பவர்களுக்கும் நிலம் தேவைபடுபவர்களுக்கும் நிலங்களை வழங்காமல் சொந்த அரசியல் கட்சி கட்சிகளுக்கு வழங்கும் வகையில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளனர் என்று அவர் குற்றஞ்சாட்டினார்.

மஇகாவும் பிபிபியும்

இந்த நிலங்களை பெற்றுக் கொண்ட அரசியல் கட்சிகளிலிருந்து மஇகாவும் பிபிபியும் (மைபிபிபி)ஆகிய கட்சிகள் விடுபட்டுள்ளன.

தேசிய முன்னணியின் பங்காளி கட்சியாக இவை இரண்டும் இருந்த போதிலும் கடந்த 10 ஆண்டுகளாக நிலங்களை பெற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலங்கள் அனைத்தையும் பேரா மாநில அரசாங்கம் அங்கீகரித்துள்ளதால் இவை அனைத்தும் இம்மாநிலத்திலுள்ள நிலங்களே ஆகும் என அவர் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment