சென்னை-
அரசியலில்
நுழைவதைப் பற்றி நான் பேசிக்கொண்டிருக்கிறேனே தவிர இன்னும் எவ்வித முடிவும் எடுக்கவில்லை. ஒருவேளை முடிவு
எடுத்தால் நிச்சயம் உங்களிடம் தெரிவிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
'காலா' படத்தின் படப்பிடிப்புக்காக சென்னையிலிருந்து
மும்பைக்கு விமானத்தில் புறப்பட்டு செல்லும்போது சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம்
அவர் இவ்வாறு கூறினார்.
கடந்த
மாதம் சென்னையில் தனது ரசிகர்களைச் சந்தித்து பேசியது முதல் ரஜினி அரசியலுக்கு
வருவாரா இல்லையா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் மீண்டும் தனது ரசிகர்களை சந்திக்கவுள்ளார். காலா படப்பிடிப்பு முடிந்தவுடன், செப்டம்பர் மாத
இறுதியில் அல்லது அக்டோபர் மாதத்தில் ரசிகர்களை சந்திப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment