கோலாலம்பூர்-
இளைஞர் நவீனின் மரணம் பகவடிவதைக்கான முற்றுப்புள்ளியாக அமைய வேண்டும்
என பிரதமர் துறை துணை அமைச்சர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி தெரிவித்தார்.
பகடிவதைக்கு
ஆளான நவீனின் மரணம் அனைவரிடத்திலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு நமது சமூகத்தின்
நாகரீகத்தையும் நற்பண்புகளையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
நமது சமுதாயம்
பல்வேறு நிலைகளில் வீழ்ச்சி கண்டு வருகிறது. இந்நிலையில் முன்னோர்கள் சொல்லி கொடுத்த
நாகரீகத்தையும் நற்பண்புகளையும் கேள்விக்குறியாக்கும் வகையில் இன்றைய இளைஞர்கள் நடவடிக்கை
அமைந்துள்ளது வேதனைக்குரிய ஒன்றாகும்.
மிகவும்
கீழ்த்தரமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பகடிவதை பலியாகியுள்ள நவீனின் மரணமே கடைசியாக
அமைய வேண்டும்.
பகடிவதைக்கும் குண்டர் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதால் இதனை களைவதற்கு
அனைவரும் ஒன்றிணைந்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் மஇகா துணைத்
தலைவருமான டத்தோஶ்ரீ தேவமணி குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment