ஜோர்ஜ்டவுன், ஜூன்
18-
பகடிவதை, சித்திரவதைக்கு
உள்ளாகி மரணத்தை தழுவிய இளைஞர் தி.நவீனின் மரணத்தைத் தழுவிய தி.நவீனுக்கு
நாடு தழுவிய நிலையில் அனுதாப அலை எழுந்துள்ள வேளையில் அவரின் குடும்பத்தை சூழ்ந்திருக்கும்
சவால்களை களைய மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என சுங்கை
சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன் கேட்டுக் கொண்டார்.
கோலாலம்பூரில்
உயர்கல்வியை பயில காத்திருந்த நவீனை பகடிவதை, சித்திரவதை செய்து கொடூரமாக தாக்கி உயிரிழக்கச்
செய்த சம்பவம் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
தனித்து
வாழும் தனது தாயாருக்கு உதவியாக இருந்த நவீனின் மரணம் அவரது குடும்பத்திற்கு நிச்சயம்
பேரிழப்பாகும். சாதாரண நிலையில் வாழ்ந்து வரும் இக்குடும்பத்திற்கு
நவீன் நம்பிக்கையாக இருந்துள்ளார்.
'குடும்பத்தை சுமப்பான்' என்ற நம்பிக்கையில் அவனது தாயார் டி.சாந்தி இருந்திருப்பார்.
ஆனால் தற்போது நவீன் மரணமடைந்துள்ளால் அக்குடும்பத்தில் எதிர்கால சவால்களை கவனத்தில் கொள்ள
வேண்டியது மிக முக்கியமானதாகும்.
ஒரு தொழிற்சாலையில்
பணியாற்றி வரும் நவீனின் தாயாருக்கு மத்திய, மாநில அரசுகள் ஏதேனும் ஒரு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி
கொடுக்க வேண்டும். மகனின் மரணத்தால் மன வேதனைக்கு உள்ளாகியுள்ள
அவரின் தாயாருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் மனிதநேய அடிப்படையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட
வேண்டும் என நேற்று நவீனின் தாயாரை சந்தித்து ஆறுதல் கூறியபோது மணிமாறன் குறிப்பிட்டார்.
நவீனின்
மரணத்திற்கு பிரதமர்,
மாநில முதல்வர் உட்பட பல்வேறு தரப்பினர் அனுதாபம் தெரிவித்துள்ள நிலையில்
அவரின் துன்பத்தில் நாமும் கைகோர்த்துள்ளோம் என்பதை உறுதி செய்யும் வகையில் அவரது மத்திய,
மாநில அரசுகளின் நடவடிக்கைகள் அமைந்திட வேண்டும் என்றார் அவர்.
மணிமாறனுடன்
சுங்கை சிப்புட் மஇகா இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் எஸ்.லிங்கேஸ்வரனும்
நவீனின் தாயாருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொண்டார்.
No comments:
Post a Comment