கோலாலம்பூர்-
படிகவதை
செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட தி.நவீன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட
போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று மாலை மரணமடைந்தார்.
'நவீன் குணமாக வேண்டும்' என பொதுமக்கள் பலர் பிரார்த்தனை
செய்தனர். அதுமட்டுமல்லாது 'யாரை போல் தான் உருவெடுக்க வேண்டும்
என நினைத்திருந்தாரோ' அவரின் பிரார்த்தனை கூட பொய்யாகி விட்டது.
இசையமைப்பாளர்
ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிர ரசிகனான நவீன் இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என நினைத்து கோலாலம்பூரில் உள்ள கல்லூரியில் இசைத்துறையில்
உயர்கல்வியை படிக்கவிருந்தார். அதற்குள் பகடிவதைக்கு ஆளாகி உயிருக்கு போராடி கொண்டிருந்தார்
நவீன்.
இவ்வேளையில் நவீனுக்கு நேர்ந்த கொடுமையை அறிந்த ஏ.ஆர்.ரஹ்மான்
'நவீன்...சீக்கிரமே குணமாக வேண்டும் எனவும் அவருக்காக பிரார்த்திப்பதாகவும்' டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.
ஏ.ஆர்.ரஹ்மான் |
ஏ.ஆர்.ரஹ்மான்
மட்டுமல்லாது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உட்பட
பல்வேறு தரப்பினரும் நவீன் குணமாக வேண்டும் என பிரார்த்தனை செய்தனர். ஆனல் அனைவரின்
பிரார்த்தனையையும் பொய்யாக்கும் வகையில் அவரின் மரணம் அமைந்துவிட்டது.
No comments:
Post a Comment