Sunday, 25 June 2017

மீண்டும் செனட்டரானார் டத்தோஶ்ரீ விக்னேஸ்வரன்


கோலாலம்பூர்-
நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டத்தோஶ்ரீ எஸ்..விக்னேஸ்வரனின் செனட்டர் பதவிக் காலம் இன்னும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மஇகாவின் உதவித் தலைவரான டத்தோஶ்ரீ விக்னேஸ்வரனின் செனட்டர் பதவிக் காலம் நேற்றோடு முடிவடைந்த நிலையில் இன்னும் மூன்றாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.




இன்று செனட்டராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட அவரின் பதவிக் காலம் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் தேதி நிறைவு பெறும்.

செனட்டராக பதவியேற்றுக் கொண்ட டத்தோஶ்ரீ விக்னேஸ்வரனுக்கு மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.சுப்பிரமணியம், துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி உட்பட பலர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.


No comments:

Post a Comment