Thursday 8 June 2017

எதிர்க்கட்சியிடம் எதிர்காலத்தை அடகு வைக்காதீர் - பிரதமர் நஜிப் அறிவுறுத்து



தைப்பிங்-
ந்திய சமுதாயத்திற்கான எவ்வித திட்டங்களையும் கொண்டிருக்காத எதிர்க்கட்சியினரை நம்பி தங்களின் வாழ்வாதாரத்தை அடகு வைக்காதீர்கள் என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் இந்திய சமூகத்தினரை கேட்டுக் கொண்டார்.

ஆளும் தேசிய முன்னணி அரசாங்கம் இந்திய சமுதாயத்திற்காக வியூக வரைவு செயல் திட்டம் (புளூபிரிண்ட்), மை டப்தார் உட்பட பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.


நாட்டின் தேசிய நீரோட்டத்தில் எந்தவொரு இனத்தையும் கைவிடாத தேசிய முன்னணி அரசாங்கம், இந்திய சமுதாயத்திற்கான செயல் திட்டங்களை முன்னெடுப்பதிலும் பின்வாங்கியதில்லை.

ஆனால் எதிர்க்கட்சியினரிடம் இந்திய சமுதாயத்திற்கான எந்தவொரு திட்டங்களும் வரையப்படாத நிலையில் அதனை நம்பி தங்களது எதிர்கால சந்ததியினரின் வாழ்வாதாரத்தை இந்தியர்கள் அடகு வைத்து விடக்கூடாது.

'இந்திய சமுதாயத்திற்கான எந்தவொரு செயல்திட்டமாவது எதிர்க்கட்சியினரிடம் உண்டா?, எந்தவொரு செயல் திட்டமும் இல்லாத எதிர்க்கட்சியினரை இந்தியர்கள் ஆதரிப்பீர்களா?,  உங்களது அடுத்த தலைமுறையான பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் எதிர்காலத்தை நினைவில் கொண்டு வரும் 14ஆவது  பொதுத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள்' என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் வலியுறுத்தினார்.


இங்கு தாமான் காயா தமிழ்ப்பள்ளி நிர்மாணிப்பு தளத்தை பார்வையிட்ட பின்னர் உரையாற்றிய டத்தோஶ்ரீ நஜிப் இவ்வாறு கூறினார்.

இந்த நிகழ்வில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன்பேராக் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதீர், மாநில கல்வி ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அமின்புக்கிட் கந்தாங் மஇகா தலைவர் சண்முகவேலு உட்பட அரசியல் பிரமுகர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment