Sunday 25 June 2017

விடை பெற்றார் அருணாசலம் அரசியல் தலைவர்கள், பொது மக்கள் இறுதி அஞ்சலி



சுங்கை சிப்புட்-
முதுமை காரணமாக நேற்று மரணமடைந்த நாடறிந்த எழுத்தாளர் பூ.அருணாசலத்திற்கு அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், பொது மக்கள் என பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

துன் வீ.தி.சம்பந்தனுடன் நெருக்கமாக பழகி வந்ததன் காரணமாக அவரது மறைவுக்குப் பின்னரும்  அவரது புகழை பலர் அறிந்திடும் வகையில் பல்வேறு கட்டுரைகளை நாளிதழ்களில் எழுதி வந்தார். அதுமட்டுமல்லாது துன் சம்பந்தனின் பிறந்தநாளை இவ்வட்டாரத்தில் வெகு சிறப்பாக நடத்தி வந்தார் பூ.அருணாசலம்.

அன்னாரின் திடீர் மறைவு எழுத்தாளர்களை மட்டுமின்றி அரசியல் தலைவர்களையும் பொது மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.




தாமான் ஹீவூட்டிலுள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பெரியவர் அருணாசலத்தின் நல்லுடலுக்கு  மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவரும் இந்தியா, தெற்காசிய நாடுகளுக்கான சிறப்பு கட்டமைப்பு தூதர் டத்தோஶ்ரீ எஸ்.சாமிவேலு, துன் வீ.தி.சம்பந்தனின் துணைவியார் தோபுவான் உமா சம்பந்தன், பேராக் மாநில மஇகா தலைவர் டத்தோ வ.இளங்கோ, டான்ஶ்ரீ  எஸ்.வீரசிங்கம், பேராக் சட்டமன்ற சபாநாயகர் தங்கேஸ்வரி, துன் சம்பந்தனின் புதல்வி தேவகுஞ்சரி, சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன், லிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ சூல்கிப்ளி, ஜாலோங் சட்டமன்ற உறுப்பினர் லோசுங்கை சிப்புட் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் பரமேஸ்வரன், தொகுதி மஇகா தலைவர் மு.இளங்கோ, துணைத் தலைவர் அஜாட் கமாலுடின், செயலாளர் கி.மணிமாறன், வழக்கறிஞர் அமுசு.பெ.விவேகானந்தா, சுங்கை சிப்புட் இந்திய இயக்கத்தின் தலைவர் வீ.சின்னராஜு உட்பட கட்சி தலைவர்களும் பொது இயக்கத்தினர் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர்.


தாமான் ஹீவூட்டில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதி காரியங்களுக்குப் பின்னர் சுங்கை சிப்புட் இந்து மயானத்தில் அருணாசலத்தின் நல்லுடல் தகனம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment