Friday 23 June 2017

உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் அளிக்கும் 'யோகா'



இந்த இணைய காலத்தில் உடல் ஆரோக்கியத்தை கவனிக்கும் மக்களின் எண்ணிக்கை மிக குறைவுதான். 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பதற்கேற்ப எவ்வித நோய்நொடி இல்லாமல் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு 'யோகா' வழிவகுக்கிறது. யோகா கலையில் ஈடுபட்டு அதில் நன்மைகள் அடைந்துள்ளவர்கள் கருத்துகள் 'பாரதம்' மின்னியல் ஊடகத்திடம் பகிர்ந்து கொண்டனர்.


யோகா கலையை பல ஆண்டுகளாக பயின்று வருகிறோம். உடல் பருமன், நீரிழிவு நோய், கை,கால் வலி, தலைவலி, இடுப்பு வலி, என நோய்களின் பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம். இதை தொடர்ந்து மேற்கொள்வதன் வாயிலாக உடல் ஆரோக்கியத்தில் பல மாற்றங்களை காண முடிகிறது. நோய்களை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் உடல் சுறுசுறுப்பாகவும் இருக்கின்றது. யோகா பயிற்சியால் பல நன்மைகளை கண்டுள்ளோம் என்று உசிலம்மா ராமசாமி, சுந்தரலட்சுமி தங்கதுரை, ஷர்மிளா தேவி கிருஷ்ணன், திருநாவுகரசர், கயலை பச்சையப்பன் ஆகியோர் கூறினர்.




யோகா கலையின் முக்கியத்துவத்தை மற்றவர்களுக்கு உணர்த்தினால் கண்டிப்பாக அவர்களும் இப்பயிற்சியை மேற்கொள்வார்கள். உடல் ஆரோக்கியம் மட்டுமன்றி மனதையும் ஒருநிலைப்படுத்துகிறது இந்த யோகாசன கலை. நம் சமயம் சார்ந்த விஷயங்களையும் இந்த யோகா பயிற்சியின் மூலம் கற்றுக்கொள்ளலாம் என்று சுகுணா சுப்ரமணியம், தட்சாயினி ராதாகிருஷ்ணன், ஜெயந்தி முனியாண்டி ஆகியோர் தெரிவித்தனர்

No comments:

Post a Comment