Wednesday 4 April 2018

அறிமுகம் கண்டது மலேசிய இந்திய விண்வெளி இணையத்தளம் டாக்டர் குமரவேலு தொடக்கி வைத்தார்


கோ.பத்மஜோதி

கிள்ளான்-
அறிவியல் துறையின் முக்கியத்துத்தை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற உன்னத நோக்கில் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் மலேசிய இந்திய விண்வெளி அறிவாந்தோர் இயக்கம் மிக துடிப்புடன் செயல்பட்டு வருகிறது.

தன்னார்வல இயக்கத்தினரால் உருவாக்கம் கண்ட இந்த இயக்கம் தற்போது அறிவியல் இணையத்தள அகப்பக்கத்தை வெளியீடு செய்துள்ளது. மாணவ சமுதாயத்திற்கும் அறிவியல் தாகம் கொண்டவர்களுக்கும் முக்கியமான தளமாக இந்த அறிவியல் இணையத்தள அகப்பக்கம் செயல்படும் என்று இயக்கத்தின் தலைவர் குகனேஸ்வரன் தெரிவித்தார்.


கிள்ளான் மெரிடா ஹொட்டலில் நடைபெற்ற விழாவில்  இணையத்தள அறிமுக  டாக்டர் குமரவேலு ராமசாமி, குகனேஸ்வரன், துணைத் தலைவர் சத்தியசீலன் ஆகியோர் இணையதள அகப்பக்கத்தை தொடக்கி வைத்தனர்.

இந்த இயக்கத்தினர் புதுமையான அறிவியல் பின்புலன் சார்ந்த திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தி வந்தனர். இத்திட்டங்களை பின் சீர்ப்படுத்தப்பட்டு நேர்த்தியான வழிமுறையின் படி பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டது. இந்நிகழ்வுகளைப் பொது நிகழ்வுகளாக நடத்தி, அந்நிகழ்வுகளின் தரவுகளை ஆய்வு செய்து அதிலிருந்து பெறப்பட்ட தகவல்களைச் சேகரித்து ஒவ்வொரு திட்டத்தையும் சீர் செய்துள்ளது. தன்னார்வளர்களின் நேரம், திறமைகளை முழுமையாகப் பயன்படுத்தி இத்திட்டங்கள் மறுவடிவம் பெற்றது.


புது வடிவம் பெற்ற நிகழ்ச்சிகளைப் பள்ளிகளுக்குச் சென்று செயல்படுத்தப்பட்டது. முதல் முறையாக ஜோகூர், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. படிநிலை 1,2,3,4 என வடிவமைத்து ஏறக்குறைய 2012ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை 7,500 மாணவர்களுக்கு 43 பள்ளிகளில் இந்நிகழ்ச்சிகளை செயல்படுத்தி வெற்றியும் கண்டுள்ளது இந்த இயக்கம்.

இவ்வியக்கத்தின் வழி தீபகற்ப மலேசியாவிலிருந்து 8 மாநிலங்களில் ஏறக்குறைய 53 நிகழ்வுகளையும் அதனை 67 பள்ளிகள் உள்ளடக்கிய நிகழ்வாக கடந்த ஆண்டு மட்டுமே 4800 மாணவர்கள் பயனுற இந்நிகழ்ச்சிகளை செய்துள்ளோம்.

அடுத்த கட்டமாக இந்நிகழ்ச்சிகளை அனைத்துலக அளவில் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். இதன் வழி மாணவர்களுக்கு இன்னும் பல வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்துலக அளவில் நாடுகளை தேர்தெடுத்துள்ளோம். அவை இந்தியா, இலங்கை, ஜப்பான், லண்டன், சிங்கப்பூர் போன்ற நாடுகளாகும் என்றார் அவர்.

இவ்வியக்கத்தின் வழி நடைபெறவிருக்கும் நடவடிக்கைகளில் பங்கு பெற விரும்புபவர்கள், உதவிக்கரம் நீட்டுபவர்கள், நண்கொடை அளிக்க விரும்பும் கொடைநெஞ்ங்கள், அறிவியல், வானியல் சார்ந்த தகவல்கள் பெற விரும்புபவர்கள் இயக்கத்தின் தலைவர் குகனேஸ்வரன் தமிழ்மணி 012-463 4171, செயலாளர் அகிலன் 012-695 7371 என்ற எண்களுடன் தொடர்புக் கொள்ளலாம்.

இணையதள முகவரி: www.misiassociation.org



No comments:

Post a Comment