Wednesday 11 April 2018

பேரா மாநிலத்தின் தேர்தல் கொள்கை அறிக்கை வெளியீடு



ரா.தங்கமணி, புனிதா சுகுமாறன்

ஈப்போ-
பேரா மாநில நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் கொள்கை அறிக்கை ஆதரவாளர்களின் பலத்த கரகோஷத்துடன் வெளியிடப்பட்டது.

சமூக நலன் உள்ளடங்கிய திட்டங்கள் குறித்து இன்று பேரா கிந்தா ஹோட்டலில் டத்தோ அமாட் ஃபைஷால் டத்தோ அஸுமு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.


தேர்தல் கொள்கை அறிக்கையி ன் சில முக்கிய கூறுகள்:

  • வீடுகளுக்கான தண்ணீர் கட்டணத்தை குறைத்தல்.
  • குறிப்பிட்டோருக்கு இலவச மருத்துவ அட்டை.
  • இளைய தொழில்முனைவர்களுக்கும் மைக்ரோ கடனுதவித் திட்டம்.
  • மாநில கட்டணங்களில் பொருள் சேவை வரியை (ஜிஎஸ்டி) அகற்றுதல்.
  •  “எனது பேரா” வீடமைப்புத் திட்டம்.
  • மாநில மந்திரி பெசார், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தங்களின் சொத்துடமைகளை அறிவிக்க வேண்டும்.
  • மாநில மந்திரி பெசார் பதவி கால வரம்பு இரண்டு தவணை மட்டுமே.
  •  நகராண்மைக் கழக உறுப்பினர்கள், கிராமத்து தலைவர்களை தேர்ந்தெடுப்பதில் ஊராட்சி மன்றங்கள் ஜனநாயக முறையை கையாளும்.
  • இஸ்லாம் மதத்தை உரிமை நிலைநிறுத்தப்படுவதோடு இஸ்லாம் அல்லாதவர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும்.
  •  வழிப்பாட்டு தளங்களுக்கு ( மசூதி, இந்து கோயில், சீனர் கோயில், தேவாலயம், இடுகாடுகளுக்கும் ) தேவைகேற்ப நிலங்கள் ஒதுக்கப்படும்
  •  உயர்கல்வி கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு நிதி.
  • முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு மாநில மந்திரி பெசார் உபகார சம்பளம்.
  • மாநில அரசு அலுவலகங்களில் குழந்தை பராமரிப்பு மையங்கள் அமைத்தல்.
  • சுயமேலாண்மை, குடும்ப நல, தொழில்துறை ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களில் மகளிரின் திறன்களை மேம்படுத்துவதற்காக மகளிர் மேம்பாட்டு நிறுவனங்கள் அமைத்தல்.


இந்த தேர்தல் கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் நம்பிக்கைக் கூட்டணியைச் சேர்ந்த பிகேஆர், டிஏபி, அமானா, பெர்சத்து ஆகிய கட்சிகளின் முக்கிய தலைவர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.




No comments:

Post a Comment