Tuesday 17 April 2018

'கைநழுவியது' கேமரன் மலை; அதிருப்தியில் டான்ஶ்ரீ கேவியஸ்?


ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
கடந்த 4 ஆண்டுகளாக கடுமையான உழைப்பை போட்ட கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி கைநழுவி  போனதால் கடுமையான அதிருப்தியில் உள்ள மைபிபிபி கட்சியின்  தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ்  அதிரடியான முடிவை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

'கேமரன் மலை தொகுதிக்கு நானே வேட்பாளர்' என உறுதியான முழக்கத்துடன் கேமரன் மலையில் கடுமையான சேவையை வழங்கியுள்ள டான்ஶ்ரீ கேவியஸ்,  இப்போது சிகாம்புட் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதில் அதிருப்தி அடைந்துள்ளார் என கூறப்படுகிறது.

'கேமரன் மலைக்கு பதிலாக அப்போதே சிகாம்புட் தொகுதி என கூறினால் அங்கு போட்ட உழைப்பை சிகாம்புட் தொகுதியிலேயே போட்டியிருப்பேனே' என டான்ஶ்ரீ கேவியஸ் ஆதங்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்த தொகுதி மாற்றத்தால் கடுமையான அதிருப்தியை கொண்டுள்ள டான்ஶ்ரீ கேவியஸ் விரைவில் கூடவுள்ள கட்சியின் மத்திய செயலவைக் கூட்டத்தில் அதிரடியான முடிவை எடுக்கவுள்ளார் என நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment