Friday 27 April 2018
அதிகாரப்பூர்வமாக தொடக்கம் கண்டது 'சுங்கை சிப்புட் இந்திய சமுதாய சமூக மேம்பாட்டு சங்கம்'
ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் வட்டாரத்திலுள்ள இந்திய மக்களுக்கு சமூகநல நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் 'சுங்கை சிப்புட் இந்திய சமுதாய சமூக மேம்பாட்டு சங்கம்' அண்மையில் அதிகாரப்பூர்வமாக தொடக்கம் கண்டது.
இங்குள்ள மக்களுக்கு பல்வேறு வகையில் உதவி புரிவதற்கு ஏதுவாக இந்த சங்கம் தொடங்கப்பட்டதாக கூறிய அதன் தலைவர் விஜயன், இதன் வழி மக்களுக்கு சமூக நலச் சேவைகளும் ஆக்ககரமான திட்டங்களும் முன்னெடுக்கப்படுவதாக சொன்னார்.
இச்சங்கத்தின் தொடக்க விழாவில் உரையாற்றிய சுங்கை சிப்புட் தேசிய முன்னணி தலைவர் டத்தோ சூல்கிப்ளி, அரசு சார்பற்ற பொது இயக்கங்கள் தங்களது சேவைகளை மக்களுக்கு வழங்க முன்வர வேண்டும். அப்போதுதான் அந்த சமுதாயத்தின் வளர்ச்சி ஆக்ககரமாக அமையும் என கூறினார்.
இந்நிகழ்வில் சுங்கை சிப்புட் மஇகா தொகுதித் தலைவர் இளங்கோவன் முத்து, ஜாலோங் தொகுதி தேமு வேட்பாளர் டத்தோ டான் லியான் ஹோ இச்சங்கத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தனர். இந்நிகழ்வில் சங்கத்தின் துணைத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் லோகன் உட்பட இயக்கத்தினரும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment