Sunday 22 April 2018

பேரா தேமு கொள்கை அறிக்கையை வெளியிட்டார் டத்தோஶ்ரீ ஸம்ரி


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
அனைத்துத் தரப்பு மக்களின் நல்வாழ்வையும் நிலைபெறச் செய்யும் வகையிலான தேர்தல் கொள்கை அறிக்கையை பேரா தேசிய முன்னணி இன்று வெளியிட்டது.

எத்தரப்பினரும் விடுபட்டு விடாமலிருக்கு வகையில் அனைத்து மக்களின் நலனையின் காக்கும் திட்டங்களை இந்த தேர்தல் கொள்கை அறிக்கை கொண்டிருக்கிறது என  மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காடீர் தேமு கொள்கை அறிக்கையை வெளியீடு  செய்து வைத்தபோது பேசினார்.

மாநில பொருளாதார வளர்ச்சி, வீட்டுடைமை திட்டம், அமைதி, பாதுகாப்புக்கு உத்தரவாதம், பேரா மாநிலத்தை அனைத்துலக ரீதியில் மேம்படுத்துவது, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, கல்விக்கு உதவி  போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களை தேர்தல் கொள்கை அறிக்கை கொண்டிருக்கிறது.

மகளிர், இளைஞர்கள், பூர்வக்குடியினர், கிராமப்புற மக்கள், நகர்ப்புற மக்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் அனைத்துத் தரப்பினரின் நலனையும் பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் சொன்னார்.

தேசிய முன்னணி அரசாங்கம் மக்கள் நலன் காக்கும் அரசாங்கம் என்பதால் மக்களை முன்னிறுத்திய கொள்கையும் கோட்பாடுமே மாநில அரசாங்கத்தின் கடப்பாடாகும் என அவர் சொன்னார்.

இந்நிகழ்வில் தேசிய முன்னணியின் பங்காளி, தோழமை கட்சிகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment