Sunday 8 April 2018

பிரிம் உதவித் தொகை அதிகரிப்பு - அதிரடியாக அறிவித்தார் நஜிப்






கோலாலம்பூர்,
பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் அறிவித்துள்ள தேசிய முன்னணி தேர்தல் கொள்கை அறிக்கையில் 'பிரிம்' உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

3,000 வெள்ளிக்கும் குறைந்த குடும்ப வருமானம் பெறும் தரப்பினருக்கு 800 வெள்ளி கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது 400 வெள்ளி பெறுவோர் வரும் ஜூன், ஆகஸ்டு மாதங்களில் இரு மடங்காக உயர்வு கண்டு 800 வெள்ளியாக பெறவுள்ளனர். அதாவது வரும் ஜூன் மாதம் 800 வெள்ளியும் ஆகஸ்டு மாதம் 800 வெள்ளியும் பெறுவர். வருடத்திற்கு 1200 வெள்ளியிலிருந்து 2,000 வெள்ளியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

3,000 வெள்ளிக்கும் கூடுதலாக குடும்ப வருமானம் பெறுவோருக்கு ஜூன், ஆகஸ்டு மாதங்களில் 300 வெள்ளியுடன் கூடுதலாக 300 வெள்ளியும் சேர்த்து 600 வெள்ளியாக வழங்கப்படவுள்ளது.

திருமணமாகாத தனிநபருக்கு வழங்கப்பட்டு வந்த 450 வெள்ளியுடன் கூடுதலாக 150 வெள்ளி வழங்கப்படவுள்ளது. 

மேலும், புதிய திட்டமாக 4,000 வெள்ளி முதல் 5,000 வரை குடும்ப வருமானம் பெறும் தரப்பினருக்கு 700 வெள்ளி பிரிம் உதவி தொகை வழங்கப்படவுள்ளது. இது ஜூன், ஆகஸ்டு மாதங்களில் தலா 350 வெள்ளியாக வழங்கப்படும் என தனது தேர்தல் கொள்கை அறிக்கையில் பலத்த கரகோஷத்திற்கிடையே அறிவித்தார்.


No comments:

Post a Comment