Saturday 7 April 2018
இந்தியர்கள் சார்ந்த 25 அம்ச திட்டங்களை உள்ளடக்கிய ந.கூ. தேர்தல் வாக்குறுதி- துன் மகாதீர் வெளியிட்டார்
பெட்டாலிங் ஜெயா-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவை கைப்பற்றினால் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை 100 நாட்களில் களைவோம் என நம்பிக்கைக் கூட்டணி (ந.கூ) அறிவித்துள்ளது.
அதற்கு ஏதுவாக 25 அம்ச திட்டங்களை உள்ளடக்கிய தேர்தல் கொள்கை அறிக்கைகளை நேற்று பெட்டாலிங் ஜெயா சிவிக் சென்டரில் வெளியிடப்பட்டது.
* தேசிய வீடமைப்பு கொள்கையில் இந்தியர்கள் சொந்த வீடுகளை பெறுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
* பி40 மக்கள், முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள் வாடகை திட்டத்தின் வழி சொந்த வீடுகளை பெற வழி காணுதல்.
* தேசிய பள்ளிகளுக்கு இணையாக தமிழ்ப்பள்ளிகளை அரசாங்க பள்ளிகளாக உருமாற்றுதல்.
* தமிழ் இடைநிலைப்பள்ளியை நிர்மாணித்தல்.
* தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளமாக 1,500 வெள்ளி நிரணயம் செய்தல். (ஆட்சிக்கு வந்த முதல் தவணையிலேயே)
* பினாங்கு இந்து அறப்பணி வாரியம் போல் எல்லா மாநிலங்களிலும் இந்து அறப்பணி வாரியம் அமைத்தல்.
* இந்தியர்களின் சமூக பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த 400 கோடு வெள்ளி சிறப்பு நிதி ஒதுக்கீடு.
* அரசு சார்ந்த நிறுவனங்கள், நகராட்சி, மாநில, மத்திய அரசாங்க வேலைகளில் இந்தியர்களுக்கு 10 % வேலை வாய்ப்பு.
இதுமட்டுமின்றி இன்னும் பல திட்டங்களை உள்ளடக்கிய நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதியை அக்கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் துன் மகாதீர் முகம்மது வெளியிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment