Friday 20 April 2018

இன்னமும் 'களை' கட்டாத 14ஆவது பொதுத் தேர்தல்?


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்கான 'தேதி' குறிக்கப்பட்டுள்ள சூழலில் தேர்தல் பரபரப்பு இன்னமும் 'களை' கட்டவில்லை என்றே தெரிகிறது.

கடந்த 7ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மே 9ஆம் தேதி 14ஆவது பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நாள் என்பதை தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது.

ஆனால் இன்னமும் வேட்பாளர் விவகாரத்தில் ஆளும் தேசிய முன்னணி அரசாங்கமும் எதிர்க்கட்சியான பக்காத்தான் ஹராப்பானும் தனது வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளனர்.

முன்பெல்லாம் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே இவர்தான் வேட்பாளர் என கணிக்கப்பட்டு, நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் அந்த வேட்பாளரின் 'அனல் பறக்கும்' பிரச்சாரத்தால் தேர்தல் காலம் ஒரு 'திருவிழா' போல எண்ண தோன்றும்.

ஆனால் இப்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னமும் வேட்பாளரும் போட்டியிடும் தொகுதிகளும் உறுதி செய்யப்படாமல் இழுபறி நிலையே நீடிக்கிறது.

தேசிய முன்னணியிலும் பக்காத்தான் ஹராப்பானிலும் இதே நிலை நீடிப்பதால் அந்தந்த கட்சிகளின் ஆதரவாளர்கள் அடிமட்ட களப்பணி வேலைகளில் களப்பணி ஆற்றுவதில் தயக்கம் காட்டி வருவதாகவே தெரிகிறது.

வேட்பாளர் யார்? என்ற கேள்வியே அனைவரிடத்தில் எதிரொலித்துக் கொண்டிருப்பதால் தேர்தல் பரபரப்பு இன்னமும் 'களை' கட்டாமல் உள்ளது.

No comments:

Post a Comment