Thursday, 26 April 2018
மைபிபிபி கட்சி தேசியத் தலைவர் பதவியிலிருந்து விலகினார் டான்ஶ்ரீ கேவியஸ்
கோலாலம்பூர்-
மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக டான்ஶ்ரீ எம்.கேவியஸ் முகநூல், டுவிட்டர் மூலம் தெரியபடுத்தியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை 23ஆம் தேதியிலிருந்து மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர், கூட்டரசுப் பிரதேச மைபிபிபி மாநிலத் தலைவர், பேரா மாநில மைபிபிபி ஆலோசகர் போன்ற பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு டான்ஶ்ரீ கேவியஸ் பல நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், அது பலனளிக்காமல் அங்கு மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சி.சிவராஜ் தேமு வேட்பாளராக களமிறக்கப்பட்டதால் மைபிபிபி- தேமு இடையே சலசலப்பு மூண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment