Monday 9 April 2018

'கெலிங்' வார்த்தை; இந்தியர்களை இழிவுபடுத்துகிறாரா மகாதீர்?


மூவார்-
இந்தியர்களை இழிவுபடுத்தும் சொல்லாக கருதப்படும் 'கெலிங்' வார்த்தையை பயன்படுத்தியதன் வழி இந்திய சமுதாயத்தை முன்னாள் பிரதமர் துன் மகாதீர் அவமானப்படுத்தியுள்ளார் என்ற சர்ச்சை  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜோகூர், மூவாரில் நடைபெற்ற நிதி திரட்டும் நிகழ்வில் பேசிய துன் மகாதீர், தேர்தல் ஆணையத்தை விமர்சிக்கும் வகையில் இச்சொல்லை பயன்படுத்தியுள்ளார்.

நம்பிக்கைக் கூட்டணியில் உள்ள உறுப்பு கட்சிகள் ஒரே சின்னத்தை பயன்படுத்துவதற்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற வேண்டும் என வெளியான செய்தி குறித்து கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு பேசினார்.

 நஜிப்பின் நண்பர்கள் குறிப்பாக தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஷிம் அப்துல்லா ஒரே சின்னத்தை நாங்கள் பயன்படுத்துவதற்கு அவரிடம் அனுமதியைப் பெற வேண்டும் என கூறுகிறார்.
நான் 'கெலிங்' வார்த்தையை உபயோகிக்க நினைக்கின்றேன். 'கெலிங்' (இந்தியர்கள்) போடா என கூறுவார்கள்.
நாங்கள் ஒரே சின்னத்தைப் பயன்படுத்தக்கூடாது என எந்த சட்டம் கூறுகின்றது? இந்த புதிய சட்டம் இன்று காலையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது என துன் மகாதீர் கூறினார்.
நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளருமான துன் மகாதீர் 'கெலிங்' என்ற வார்த்தையை பயன்படுத்தி பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

No comments:

Post a Comment