Saturday 7 April 2018

இசையமைப்பாளர் தீபனின் “இறைவன் இல்லம்”


செய்தி - படங்கள் : மோகன்ராஜ் வில்லவன்

இறைவன் இல்லம் எனும் பக்தி இசை தொகுப்பை இசையமைப்பாளர் தீபனின் இசையில் இவ்வாண்டு மிகப்பிரம்மாண்டமாக உலகமுழுவதும் வெளியீடு காணவுள்ளது. இந்த பக்தி இசைத் தொகுப்பில் உள்ளூர் கலைஞர்களும் பல நாடுகளிலுள்ள கலைஞர்களும் ஒன்றிணைந்து பணிபுரியவுள்ளனர். 

முழுமையான சங்கீதமும் பக்தியும் நிறைந்த இசைத் தொகுப்பாக “இறைவன் இல்லம்” எனும் பக்தி இசைத் தொகுப்பு உருவாகுகிறது. 

இதன் அறிமுக விழா கிள்ளான், தாமான் ஆலாம் ஷாவிலுள்ள இறைவன் இல்லத்தில் மிகச் சிறப்பாக நடைப்பெற்றது.



இத்தொகுப்பின் தயாரிப்பாளரான தொண்டர்மணி, சொல்லேலுலாலர் கைலாசம் சின்னதம்பி இந்த இசைத் தொகுப்பின் வழி தயாரிப்பாளாராக அறிமுகமாகிறார். தொண்டர்மணி கைலாசம் சின்னதம்பி பற்றி கூறுகையில், இறைவன் இல்லத்தின் ஆலோசகரும் தொழிலாதிபருமாவர். இவர் தனது திருத்தொண்டை கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றி வருகிறார். இறைவன் இல்லம் முழுமையாக குரு தேவர் சிவாய சுப்ரமுனியர் சுவாமி மற்றும் சத்குரு போதி நாத வேலன் சுவாமி அவர்களின் போதனையின் அடிப்படையில் தங்கு தடையின்றி மிகச் சிறப்பாக வழி நடத்தி இறைத்தொண்டை செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமயத்தொண்டு வழி நம் மாணவர்களுக்கு தமிழ்மொழி, சமயம், மிருதங்கம், தபேலா, வீணை பரதம், யோக, சங்கீதம், திருமுறை வகுப்புகளும் போதனைகளும் முறையாக பயிற்று வருகின்றனர். இறைவன் இல்லத்தின் வழி சுற்று வட்டாரத்திலுள்ள பள்ளி மாணவர்களுக்கு சமயக் கல்வியோடு சமய அறிவையும் ஊட்டி அவர்களுக்கு வளமான வாழ்க்கையே உருவாக்கி வருகின்றனர்.

இந்த இல்லத்தை அடுத்த இலக்குக்கு கொண்டுச் செல்ல பக்தி இசைத் தொகுப்பினை உருவாக்குகின்றனர். இதில் கிடைக்கும் நிதியின் ஒரு பங்கினை தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் அவர்களின் வளர்ச்சிக்கும் பயன்ப்படுத்தவுள்ளனர். மேலும், இறைவன் இல்லத்தின் வளர்ச்சிக்காகவும் புதுத் திட்டங்களுக்கும் மையத்தின் மேன்பாட்டு திட்டங்களுக்கும் பயன்படுத்தவுள்ளதாகவும் இறைவன் இல்லத்தின் இசைத் தொகுப்பு தயாரிப்பு குழுவினர் சார்பின் தொண்டர்மணி கைலாசம் சின்னதம்பி குறிப்பிட்டார்.



இறைவன் இல்லம் பக்தி இசைத் தொகுப்பினை சாய் பாலாகணபதி மேலாண்மையில் முழுமையாக உருவாகவுள்ளது. இந்த இசைத் தொகுப்பின் சிறப்பு அம்சமாக இறைவன் இல்லத்தில் அமைந்துள்ள இராஜ கணபதியை மைய்யமாகக் கொண்டு உருவாகவுள்ளது. இந்த இசைத் தொகுப்பில் 10 பாடல்கள் அமைந்துள்ளது. அனைத்து பாடல்களையும் அறிமுக பாடலாசிரியரும் இத்தொகுப்பின் தயாரிப்பாளருமான தொண்டர்மணி கைலாசம் சின்னதம்பி எழுதியுள்ளார்.

இந்த பாடல் தொகுப்பு சுமார் 70 ஆயிரம் அளவில் தயாரிக்கப்படவுள்ளது. இதில் காணொளி பாடலும் உருவாகவுள்ளதாகவும் அனைத்து பாடல்களும் இவ்வாண்டு இறுதிக்குள் மலேசியாவில் மிகப் பிரம்மாண்டமாக வெளியீடு காணவுள்ளது. இதில் பிரபல பக்திப் பாடல் பாடகர்கள் பணிப்புரியவுள்ளனர். இறைவன் இல்லம் இசை தொகுப்பு பற்றி செய்திகள் ஊடகங்களிலும் அதிகாரப்பூர்வ முகநூலிலும் அவ்வப்போது வெளியீடப்படும் என இசையமைப்பாளர் தீபன் தெரிவித்தார்.


இப்பாடல் சிறப்பான முறையில் வெளியீட பொதுமக்களின் ஆதரவும் வாழ்த்தும் மிகவும் அவசியம் என இப்பாடல் தொகுப்பின் மேலாண்மையாளர் சாய் பாலகணபதி கூறினார். 


No comments:

Post a Comment