Saturday 7 April 2018

கேமரன் மலையில் போட்டியிடுவதில் மைபிபிபி உறுதியாக உள்ளது- டான்ஶ்ரீ கேவியஸ்

புத்ராஜெயா-
மஇகாவின் பாரம்பரியத் தொகுதி என்றாலும் நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட மைபிபிபி  குறி வைத்துள்ளது என அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் தெரிவித்தார்.

அத்தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான மஇகா முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல்,  சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் என அறிவிக்கப்பட்டதிலிருந்து  தேசிய முன்னணி சார்பில் அங்கு களமிறங்கி சேவை செய்து கொண்டிருக்கிறேன்.

மக்களுக்காக பல ஆண்டுகளாக நாங்கள்  (மைபிபிபி) மக்கள் சேவையாற்றி கொண்டிருக்கும்போது அங்கு நாங்களே போட்டியிடலாமே. எதற்கு வேறொருவர் அங்கு போட்டியிட வேண்டும்?

தேசிய முன்னணி கொள்கையை பின்பற்றி நான் இங்கு சேவையாற்றி வெற்றி வேட்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறேன். மக்களுக்காக அடிமட்டம் வரை சென்று சேவையாற்றுபவர்களே எளிதில் வெற்றி பெறக்கூடிய வேட்பாளர் ஆவர்.

வெற்றி பெறக்கூடிய தொகுதிகளை தேசிய முன்னணி பங்காளி கட்சிகளுக்குள் மாற்றிக் கொள்வதில் எவ்வித பிரச்சினையும் இருக்காது. கடந்த 13ஆவது பொதுத் தேர்தலில் 5 தொகுதிகளில் மைபிபிபி போடியிட்டது அந்த தொகுதிகளை மாற்றி கொண்டு வெற்றியை நிலைநாட்டுவதே  ஆக்கப்பூர்வமாகும் என டான்ஶ்ரீ கேவியஸ் கூறினார்.

அதோடு, மைபிபிபி போட்டியிடக்கூடிய தொகுதிகள், வேட்பாளர்கள் யார் என்பது அடுத்த வாரத்திற்குள் தெரிந்து விடும் என அவர் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment