Tuesday 3 April 2018

ஏப்.6இல் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்?


பெட்டாலிங் ஜெயா-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் வரும் வெள்ளிக்கிழமை 6ஆம் தேதி நாடாளுமன்றம் கலைப்பதற்கு பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் திட்டமிட்டிருக்கலாம்.

ஏப்ரல் 3ஆம் தேதி தொடங்கி 5ஆம் தேதி வரை வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நஜிப் வரும் வெள்ளிக்கிழமை புத்ராஜெயாவுக்கு திரும்பி அமைச்சரவை கூட்டத்தை நடத்தவுள்ளார்.

நாளை ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த அமைச்சரவை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா, பண்பாட்டு துறை அமைச்சர் டத்தோஶ்ரீ நஸ்ரி தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 7ஆம் தேதி புக்கிட் ஜாலில் அரங்கத்தில் தேசிய முன்னணியின் தேர்தல் கொள்கை அறிக்கைகளைவெளியிடுவதற்கு முன்னதாக நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகே தேமுவின் தேர்தல் கொள்கை அறிக்கைகள் வெளியிடப்படுவது ஒரு கலாச்சாரமாக பின்பற்றப்படுகிறது.
இவ்வாரத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதை பிரதமர் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அப்துல் ரஹ்மான் டஹ்லான் கோடி காட்டியிருந்தார்.

கடந்த 13ஆவது பொதுத் தேர்தலில்கூட அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் 2013 ஏப்ரல் 3ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் அமைச்சரவை கூட்டம் முடிந்து குழுப்படம் எடுத்துக் கொள்வதை ஆளும் அரசாங்கம் ஒரு பாரம்பரியமாக கடைபிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment