ரா.தங்கமணி
ஷா ஆலம்-
இன ரீதியாக நாம் பிளவுபட்டிருந்தாலும் மலேசியர் என்ற ரீதியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம் என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் குறிப்பிட்டார்.
உலகின் பல நாடுகளில் இல்லாத பெருமை மலேசியர்களாகிய நாம் பெற்றுள்ளோம். இங்கு பல்வேறு இனங்களையும் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கொண்டவர்கள் வாழ்கின்றனர்.
ஆனால் ஓர் இனத்தின் பெருநாள் காலங்களில் எவ்வித இன பேதமும் இல்லாமல் மலேசியர் என்ற உணர்வோடு அனைவரும் செயல்படுவது ஆக்கப்பூர்வமானதாகும்.
முஸ்லீகளின் நோன்புப் பெருநாள் கொண்டாட்ட நிகழ்வில் முஸ்லீம்கள் மட்டுமல்லாது சீனர்களும் இந்தியர்களும் வெகுவாக கலந்து கொள்வது அனைவரிடத்திலும் சகிப்புத் தன்மை மேலோங்கியுள்ளதை புலப்படுத்துகிறது என கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான கணபதி ராவ் தெரிவித்தார்.
நேற்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் ஏற்பாட்டில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் உபசரிப்பு நிகழ்வில் பல இனங்களைச் சேர்ந்த மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment