Thursday 19 July 2018

குடும்ப மாதர்களுக்கு இபிஎப்; முதல் மனைவியருக்கு மட்டுமே அரசாங்கம் பங்களிப்பை வழங்கும்


கோலாலம்பூர்-
குடும்ப மாதர்களுக்கு இபிஎஃப் சந்தா செலுத்தும் திட்டத்தில் முதல் மனைவியருக்கு மட்டுமே அரசாங்கம் 50 வெள்ளியை செலுத்தும் என மகளிர், குடும்ப, சமூக நல அமைச்சர் டத்தோஶ்ரீ வான் அஸிஸா தெரிவித்தார்.

முதல் மனைவியருக்கு  மட்டுமே அரசாங்கம் பங்களிப்பை வழங்கும் என குறிப்பிட்ட அவர், இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மனைவிருக்கெல்லாம் அரசாங்கம் பங்களிக்க முடியாது.

ஏனைய மனைவியருக்கு பொருளாதார ரீதியில் கணவர் பொறுப்பேற்கலாம். எதற்காக அரசாங்கம் அவர்களுக்கு பங்களிப்பை வழங்க வேண்டும்?

'மனைவி, பிள்ளைகளின் எதிர்காலம் பாதுகாக்கப்படுவதால் அரசாங்கத்தின் பங்களிப்பு இன்னும் கூடுதலாக உள்ளது  என குவாலா நெருஸ் (பாஸ்) நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் கைருடின் அமான் கஸாலி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் டத்தோஶ்ரீ வான் அஸிஸா இவ்வாறு கூறினார்.


No comments:

Post a Comment