Thursday, 5 July 2018

டத்தோஶ்ரீ நஜிப் மீது குற்றஞ்சாட்டப்பட்டது


கோலாலம்பூர்-
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் மீது மூன்று மோசடி குற்றச்சாட்டுகளும் ஓர் அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளன.

1எம்டிபியின் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்திடமிருந்து 42 மில்லியன் வெள்ளியை நஜிப் தனிப்பட்ட  வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டது. எஸ்ஆர்சி நிறுவனத்திடமிருந்து மொத்தமாக 84 மில்லியன் வெள்ளியை நஜிப் முறைகேடு செய்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

நீதிபதி டத்தோ ஸைனால் அபிடின் கமாருடின் முன்னிலையில் நஜிப் மீதான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.

இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் குழுவுக்கு சட்டத்துறைத் தலைவர் டோம்மி தோமஸ் தலைமையேற்றார்.

டத்தோஶ்ரீ நஜிப் தரப்பில் டான்ஶ்ரீ முகமட் ஷாபு அப்துல்லா வழக்கறிஞர் குழுவுக்கு தலைமையேற்றார்.


No comments:

Post a Comment