Saturday 7 July 2018

வாக்களிக்கும் வயதை 18ஆக குறைக்க வேண்டும்- சைட் சடிக்

கோலாலம்பூர்-
மலேசியர்களின் வாக்களிக்கும் வயது வரம்பை 21-இல் இருந்து 18ஆக குறைக்க வேண்டும் என இளைஞர், விளையாட்டு அமைச்சர் சைட் சடிக் சைட் அப்துல் ரஹ்மான் கூறினார்.

இதனை நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் செயல்படுத்த  முடியும் என எதிர்பார்ப்பதாக குறிபிட்ட அவர், அதற்கு முன்னர் இளைய தலைமுறையினருக்கு அரசியல் பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

மற்ற நாடுகளை போல் இடைநிலைப்பள்ளி மாணவர்களிடையே அரசியல் சார்ந்த வெளிப்பாடு ஏற்படுத்த வேண்டும் என கூறிய அவர், பள்ளி மாணவர்களிடையே ஜனநாயக செயல்முறை தொடர்பான விழிப்புணர்வை எவ்வாறு ஏற்படுத்துவது என்பது குறித்து கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக்குடன் கலந்துரையாடப் போவதாக சைட் சடிக் தெரிவித்தார்.

No comments:

Post a Comment