Saturday, 14 July 2018

பக்காத்தான் ஹரப்பான் ஆட்சியில் ஒரு தமிழ்ப்பள்ளிக்கூட மூடுவிழா காணாது- சிவகுமார் உறுதி


ரா.தங்கமணி

தைப்பிங்-

புதிதாக ஆட்சியமைத்துள்ள
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி நடப்பிலுள்ள எந்தவொரு தமிழ்ப்பள்ளியையும் மூடாது எனவும் அதனை தாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் எனவும் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார் குறிப்பிட்டார்.

 மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அப்பள்ளி இந்தியர்கள் அதிகம் உள்ள பகுதி மாற்றம் செய்யப்படுமே தவிர ஒருபோதும் அதனை ஒருபோதும் மூட விடமாட்டோம்.

முன்பு இந்நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள் இருந்ததாக வரலாறுகள் சொல்கின்றன. ஆனால் நாட்டின் சுதந்திரத்திற்கு பின்னர் பெரும்பாலான தமிழ்ப்பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் இன்று 530 தமிழ்ப்பள்ளிகளே உள்ளன.

தோட்டப்புறத்தில் இருந்த மக்கள் நகர்ப்புறங்களுக்கு மாற்றலாகி சென்றதன் விளைவாக பல தோட்டப்புற தமிழ்ப்பள்ளிகள் பல மூடுவிழா கண்டன. தமிழ்ப்பள்ளிகள் மூடுவிழா காண்பதற்கு கடந்த கால தேசிய முன்னணி அரசு தவறி விட்டது.

ஆனால், தற்போதைய பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் எந்தவொரு தமிழ்ப்பள்ளியும் மூடுவிழா காணப்படாது. அதனை தாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என கூறிய சிவகுமார்,
மாணவர்களின் குறைவால் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கும் தமிழ்ப்பள்ளிகள் இந்தியர்கள் அதிகம் உள்ள பகுதிகளுக்கு மாற்றம் செய்யப்படும் என நேற்று இங்குள்ள தமிழ்ப்பள்ளிகளை பார்வையிட வந்தபோது இவ்வாறு கூறினார்.

இதனிடயே, தமிழ் இடைநிலைப்பள்ளி அமைப்பது பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் கொள்கையாகும். அது நிச்சயம் சாத்தியமாக்கப்படும். தமிழ் இடைநிலைப்பள்ளியை அமைப்பதற்கு ஏதுவாக பினாங்கு, சிலாங்கூர் மாநில அரசுகள் ஏற்கெனவே நிலத்தை ஒதுக்கியுள்ளன என்றார்.

இங்குள்ள லாடர்டேல் தோட்டத் தமிழ்ப்பள்ளி,  லாடாங் கெத்தா தமிழ்ப்பள்ளி, அலகார் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆகியவற்றுக்கு வருகை புரிந்த சிவகுமார், அங்கு நிலவும் பிரச்சினைகளையும் கோரிக்கைகளயும் கேட்டறிந்தார்.

No comments:

Post a Comment