Wednesday 11 July 2018

அலுவலகத்தை மூடி வாடிக்கையாளர்களை சிரமப்படுத்துவதா? மணிமாறன் கேள்வி


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் நகரின் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தொலைபேசி சேவையை வழங்கிடும் திஎம் பொய்ண்ட் (TM Point) நிறுவனத்தின் கிளை அலுவலகம் மூடப்பட்டிருப்பது வாடிக்கையாளர்களுக்கு பெரும் சுமையாக அமைந்துள்ளது என சுங்கை சிப்புட் தொகுதி மஇகா செயலாளர் கி.மணிமாறன் தெரிவித்தார்.

இந்த அலுவலகம் மூடப்பட்டதால் தொலைபேசி சேவை குறித்து கருத்துகளை கேட்கவும் பெறவும் கோலகங்சார், ஈப்போ ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டிய இக்கட்டான சூழல் நிலவுகிறது.

கோலாகங்சார் மாவட்டத்தில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியே அதிகமான மக்கள் தொகை கொண்ட தொகுதியாகும், இங்குள்ள அலுவலகத்தை மூடிவிட்டு  கோலகங்சாருக்கும் ஈப்போவுக்கும் செல்ல சொல்வது எவ்வகையி நியாயமாகும்.

இங்குள்ள வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே திஎம் நிறுவனம் கிளை அலுவலகத்தை தொடர்ந்தது. ஆனால் முறையான காரணங்கள் ஏதும் வழங்கப்படாமல் இந்த அலுவலகம் மூடப்பட்டுள்ளது வாடிக்கையாளர்களை சிரமத்திற்குள்ளாக்கியுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சு உட்பட சம்பந்தப்பட்ட இலாகாக்கள் விரைந்து தீர்வு காண வேண்டும் என சமூகச் சேவையாளருமான மணிமாறன்  கோரிக்கை விடுத்தார்.

No comments:

Post a Comment