Tuesday 17 July 2018

காஜாங் வட்டார மலேசிய இந்தியர் குரல் ஏற்பாட்டில் சிலாங்கூர் மாநில மக்கள் நலத் திட்டநடவடிக்கை


ரா.தங்கமணி

 காஜாங்-
சிலாங்கூரில் வாழும் மக்கள் அரசாங்கம் ஏற்படுத்தி கொடுத்துள்ள ஆக்ககரமான திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் 'சிலாங்கூர் மக்கள் நலத் திட்டம்' நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இன்றைய சூழலில் மக்களுக்கான சிலாங்கூர் மாநில அரசாங்கம் பல வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. ஆனால் அதன் விவரங்களையும் வாய்ப்புகளையும் தெரியாமல் மக்கள் இருக்கின்றனர்.

இத்திட்டங்களை மக்கள் உணர வேண்டும் என்ற அடிப்படையில் காஜாங் வட்டார மலேசிய இந்தியர் குரல் அமைப்பு, காஜாங் மண்ணின் மைந்தர்கள் அமைப்புடன் இணைந்து 'மக்கள் நல திட்ட' நடவடிக்கையை மேற்கொண்டது என ஏற்பாட்டுக் குழுத் தலைவர் க.சரவணன் கூறினார்.

இத்திட்டத்தின் வழி  தேசிய பதிவிலாகா, தாவாஸ் திட்டம், பெடுலி சிஹாட், ஹிஜ்ரா வர்த்தக கடனுதவி, முதியோர்களுக்கான உதவி திட்டம், காப்புறுதி திட்டம், 'சிலாங்கூர் கூ' வீடமைப்பு திட்டம் உட்பட சட்ட ஆலோசனை போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்நிகழ்வு மாநிலத்திலுள்ள உட்புறப் பகுதி மக்களையும் சென்றடைய வேண்டும் என மக்கள் கேட்டுக் கொண்டது இந்நிகழ்வுக்கு கிடைத்த வெற்றியாகும் என சரவணன் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வை காஜாங் சட்டமன்ற உறுப்பினர் ஹீ லொய் சியான் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்வு வெற்றிகரமாக அமைய காஜாங் வட்டார மலேசிய இந்தியர் குரல் அமைப்பினர், காஜாங் மண்ணின் மைந்தர்கள் ஆகியோர் கடுமையாக பாடுபட்டனர். அவ்வகையில் அனைவரின் முயற்சிக்கும் பாராட்டு தெரிவித்துக் கொள்வதாக சரவணன் கூறினார்.

இந்நிகழ்வில் செனட்டர் சந்திரமோகன், காஜாங் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லீ ஆகியோர் உட்பட 250க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment