Sunday 15 July 2018

ஸாகீர் நாய்க் விவகாரம்: நரேந்திர மோடியை சந்திக்க நேர்ந்தால் நிச்சயம் விவாதிப்பேன் - குலசேகரன்


பெட்டாலிங் ஜெயா-

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால்  சர்ச்சைக்குரிய மத போதகர் ஸாகீர் நாய்க் விவகாரம் குறித்து  விவாதிப்பேன் என மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு சென்று நரேந்திர மோடியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சாகீர் நாய்க் விவகாரம் குறித்து பேசுவேன்.

இந்திய அரசாங்கம் தெளிவான காரணங்களை வழங்கி சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு ஸாகீர் நாய்க்கை திரும்ப அனுப்புமாறு கேட்டுக் கொண்டால் அது குறித்து பரிசீலிக்கப்படும் என கடந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது என அவர் சொன்னார்.

மலேசியாவின் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ள ஸாகீர் நாய்க், இங்கு எவ்வித பிரச்சினை ஏற்படுத்தாதவரை இங்கிருந்து வெளியேற்றப்படமாட்டார் என பிரதமர் துன் மகாதீர் இதற்கு முன்னர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸாகீர் நாய்க்கிற்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டதும் இங்கிருந்து வெளியேற்றப்படாததும்  மலேசிய இந்தியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment