Friday, 6 July 2018

சுதந்திர தின 'சின்னத்தை' வடிவமைக்க மலேசியர்களுக்கு அழைப்பு


புத்ரா ஜெயா-
2018ஆம் ஆண்டுக்கான சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு அதன் 'சின்னத்தை' (LOGO)  புத்தாக்க முறையில் வரைந்திட மலேசியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சு.

"Sayangi Malaysiaku" எனும் கருப்பொருளுடன்கொண்டாடப்படவுள்ள 2018ஆம் ஆண்டுக்கான சுதந்திர தினம், மலேசிய தினக் கொண்டாட்டத்திற்கான 'சின்னத்தை' மலேசியர்கள் வடிவமைத்து அனுப்பலாம்.

இந்த சின்னம் புத்தாக்கம் நிறைந்திருப்பதோடு தேச பக்தியையும் பல்வேறு இனங்களுக்கிடையிலான சகிப்புத்தன்மையையும் புலப்படுத்தும் வகையில் அமைந்திருக்க வேண்டும்.

ஆர்வமுள்ளவர்கள் தாங்கள் வடிவமைக்கப்படும் 'சின்னத்தை' Merdeka 360  என்ற முகநூல் பக்கத்திலும்  malaysiamerdeka.my என்ற மின்னஞ்சல் பக்கத்திலும் அனுப்பி வைக்கலாம்.

தங்களது வடிவமைப்பை அனுப்பும் நபர்கள் தங்களது பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றோடு தங்களது 'சின்னத்தின்' உள்ளடக்கத்தை சுருக்கமாக எழுதி அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்திற்கான சின்னத்தை அனுப்பும் இறுதி நாள்: 7 ஜூலை 2018

No comments:

Post a Comment