Thursday 5 July 2018

தொழிலாளர்களுக்கு எனது போராட்டம் ஒருபோதும் ஓய்ந்து விடாது - சிவநேசன்


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
வழக்கறிஞராக இருந்தபோது தொழிலாளர்களுக்கு எவ்வாறு போராடி உறுதுணையாக இருந்தேனோ அதேபோன்று தற்போதும் தாம் தொழிலாளர்களுக்கு உதவ தயாராக இருப்பதாக பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் குறிப்பிட்டார்.

தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டபோது அற்காக ஒரு வழக்கறிஞர் எனும் ரீதியில் போராடி அவற்றுக்கு சிறந்த தீர்வை கண்டுள்ளேன்.

அதேபோன்று தற்போது மனிதவளப் பிரிவின் ஆட்சிக்குழு உறுப்பினராக பொறுப்பேற்றுள்ள வேளையில் தொழிலாளர் நலனுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்துவேன் என அண்மையில் இங்கு நடைபெற்ற பேரா எம்டியூசியின் நோன்புப் பெருநாள் உபசரிப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் சிவநேசன் இவ்வாறு கூறினார்.

வழக்கறிஞராக இல்லாவிட்டாலும் ஆட்சிக்குழு உறுப்பினர் எனும் முறையில் தொழிலாளர் நலன் காக்கப்படுவதை கருத்தி கொண்டு எனது செயல் நடவடிக்கைகள் அமைந்திருக்கும் என அவர் சொன்னார்.

இந்நிகழ்வில் எம்டியூசியின் தலைவர் டத்தோ அப்துல் ஹலிம் பின் மன்சோர்,  பேரா எம்டியூசியின் தலைவர் முகமட்  ரிட்ஸுவான் பின் ஸக்காரியா, பேரா எம்டியூசி செயலாளர் ஹாஜி ஹம்சா பின் ஹாஜி ஜாபார் உட்பட பலர் திரளாக் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment