Saturday 7 July 2018
கருவிலுள்ள குழந்தையின் அசைவை 'ஒளி வண்ண' ஓவியமாக்கும் தொழில்நுட்பம்; ஈப்போ பந்தாய் மருத்துவமனை அறிமுகம் செய்கிறது
புனிதா சுகுமாறன்
ஈப்போ-
ஒரு பெண் தாய்மை அடைவதே அவளுக்கான பெரும் பாக்கியமாகும். அந்த பாக்கியத்தை சுமந்துள்ள பெண்ணுக்கு தனது குழந்தை கருவறையில் அசைவதை 'ஒளி வண்ண' ஓவியமாக பெறும் வாய்ப்பை ஈப்போ, பந்தாய் மருத்துவமனை ஏற்படுத்தி கொடுக்கிறது
முன்பு குழந்தையை ஆணா, பெண்ணா என்பதை தெரிந்து கொள்ளும் சூழல் மட்டுமே நிலவியது. ஆனால் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் கருவறையில் உள்ள குழந்தையின் அசைவின் மூலம் 'ஒளி வண்ண' ஓவியமாக வரையப்படும்.
"மை சைல்ட் ஃபர்ஸ்ட் கிஃப்ட்" (My Child's First Gift) எனும் கருத்தரங்கு வரும் ஜூலை 13 முதல் 15ஆம் தேதி வரை ஈப்போ, பந்தாய் மருத்துவமனையின் 5ஆவது மாடியிலுள்ள மாநாட்டு அறையில் நடைபெறவுள்ள என அம்மருத்துவமனையில் மூத்த மேலாளர் பெத்தி கெலப் கூறினார்.
22 வாரங்கள் தாய்மை அடைந்த பெண்ணின் வயிற்றில் பொருத்தப்படும் கருவியின் மூலம் அக்குழந்தையின் அசைவுகள் ஒளி வண்ணங்களாக பதிவு செய்யப்படும்.
குழந்தை பிறக்கும் வரையில் அக்குழந்தையின் அசைவுகள் பதிவு செய்யப்பட்டு பின்னர் வண்ண ஓவியமாக அப்பெண்ணிடம் வழங்கப்படும். இது தாய்மார்களுக்கு குழந்தையின் நினைவாக இருக்கும்.
இத்தகைய தொழில்நுட்ப முறை தைவானில் பல ஆண்டுகளாக உள்ள நிலையில் சிங்கப்பூரில் கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டது. மலேசியாவில் முதல் முறையாக இத்தொழில் நுட்பம் அறிமுகம் செய்வதோடு அதன் முதல் நிகழ்ச்சி இதுவேயாகும்.
மேலும் இக்கருத்தரங்கில் கர்ப்பம் தரித்துள்ள பெண்கள் கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள், உண்ண வேண்டிய உணவுகள், மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சைகள் போன்றவை குறித்து விளக்கம் அளிக்கப்படவுள்ளது.
இந்த கருத்தரங்கை மகப்பேறு நிபுணர்கள் வ.ஜெயபாலன், மருத்துவர் மின்மினி, குழந்தை மருத்துவர் லீ ஹாக் தியோங் ஆகியோர் வழிநடத்தவுள்ளனர் என அவர் சொனனார்.
இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள 5 வெள்ளி மட்டுமே கட்டணம் விதிக்கப்படுகின்றது என குறிப்பிட்ட அவர், முதல் முறையாக கர்ப்பம் தரித்தவர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் கலந்து கொள்ளலாம் என இங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் கூறினார். இச்செய்தியாளர் சந்திப்பின்போது துணை மேலாளர் ரேணுகா லெட்சுமணனும் உடனிருந்தார்.
மேல் விவரங்களுக்கும் பதிவுக்கும்: 012- 5218273 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment