Thursday, 5 July 2018

மகாதீர் பேத்தியுடன் காதலா? - மறுத்தார் சைட் சடிக்


கோலாலம்பூர்-
பிரதமர் துன் மகாதீரின் பேத்திக்கும் தமக்கும் இடையே காதல் இருப்பதாக வெளியாகியுள்ள தகவலை இளைஞர், விளையாட்டு அமைச்ச்ர சைட் சடிக் மறுத்துள்ளார்.

இதுபோன்ற வதந்தி மட்டுமல்லாது பல்வேறான பொய்யான தகவல்கள் வெளியாகியுள்ளது தமக்கு தெரியும் என  குறிப்பிட்ட அவர், தமக்கு நிச்சயம் ஆகிவிட்டதாக கூட வதந்திகள் கிளம்பியுள்ளன என்று  25 வயதான மூவார் நாடாளுமன்ற உறுப்பினருமான சைட் சடிக் கூறினார்.

இதற்கு முன்  நடிகௌ எம்மா மேம்போங்குடன்  சைட் சடிக்கிற்கு தொடர்பிருந்ததாக தகவல் வெளியானது. ஆயினும் இதனை இருவரும் மறுத்தனர்.


No comments:

Post a Comment