Tuesday, 3 July 2018

பேரா: தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியம்; உறுதி கடிதம் வழங்கப்பட்டும் நிதி வழங்கப்படவில்லையா?; ஆணவங்களை ஒப்படையுங்கள்


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
பேரா மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் சீரமைப்புப் பணிகள், புதிய கட்டடம், இணைக் கட்டடம் ஆகியவற்றுக்கு நிதி வழங்கப்படும் என உறுதி கடிதம் கிடைக்கப் பெற்றவர்கள் அது தொடர்பான ஆவணங்களை இவ்வாரத்திற்கு பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசனின் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு அவரின் சிறப்பு அதிகாரி உ.முத்துசாமி கேட்டுக் கொண்டார்.

கடந்த கால ஆட்சியின்போது இதுபோன்ற கடிதங்களை கிடைக்கப் பெற்றவர்கள் அது குறித்து ஆவணங்களை ஒப்படைத்தால் நிதியமைச்சுடன் கலந்து பேசி அந்த தொகை சம்பந்தப்பட்ட பள்ளிக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

ஆதலால்,  உறுதி கடிதம் கிடைக்கப் பெற்ற பள்ளி நிர்வாகத்தினர் தன்னை தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

தொடர்புக்கு:  05-2095015

No comments:

Post a Comment