Monday 2 July 2018

பந்தாய் மருத்துவமனையின் சமூக கடப்பாடு தொடர வேண்டும்- சிவநேசன்பாராட்டு


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
வர்த்தக ரீதியில் மட்டுமல்லாது சமூக கடப்பாட்டோடு செயல்பட்டு வரும் பந்தாய் மருத்துவமனையின் சேவை  தொடரப்பட வேண்டும் என பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.


குறைந்த வருமானம் பெறுவோர்கள் பயனடையும் வகையில் பல  திட்டங்களை தனது சமூகக் கடப்பாடு திட்டத்தின் வழியாக  நிறைவேற்றி வருவதை அறிகிறோம்.  இதுபோன்ற  நடவடிக்கைகளை பந்தாய் மருத்துவமனை தொடர்ந்து செய்ய வேண்டுமென்று சிவநேசன் கேட்டுக்கொண்டார்.
ஈப்போ பந்தாய்  மருத்துமனை ஏற்பாடு செய்திருந்த நோன்புப்  பெருநாள் விருந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திறப்புரை ஆற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
சுமார் 20 ஆண்டுகாலமாக ஈப்போவில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையான பந்தாய் மருத்துவமனை சமூகக் கடப்பாட்டோடு மக்களுக்கு  பல்வேறு  சேவைகளை  வழங்கி  வருவது பாராட்டத்தக்க ஒன்றாகும் என்று அவர் சொன்னார்.



இதற்கு முன்பு பேசிய ஈப்போ பந்தாய் மருத்துவமனையின்  தலைமை செயல்முறை அதிகாரி சோங் சியட் போஃங்இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை புரிந்த சிவநேசனுக்கும்  நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கிய நிறுவனங்களுக்கும் நன்றியைத்  தெரிவித்துக் கொண்டார்.


இந்த மருத்துவமனையின் மருத்துவச் சேவையை  மேம்படுத்தத்  தொடர் நடவடிக்கைகளை  மேற்கொண்டு  வருகிறது.   அதன்  அடிப்படையில்  அனைத்து  தரப்பினரின்  ஆதரவும்  தேவை  என்று அவர் தெரிவித்தார்.
இங்கு 226  கட்டில்கள்  உள்ளன.   நான்காவது  மாடியில்  தனிக்  கட்டில்  கொண்ட  அறைகளையும்  இரண்டு  கட்டில்கள்  கொண்ட  அறைகளையும் உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு  வருவதாகவும்  அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவமனையின் மருத்துவர்கள்அரசு சார்பற்றஇயக்கப் பொறுப்பாளர்கள், பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment