பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கை கொண்டிருந்ததே மக்களின் ஆதரவு சரிவு கண்டிருப்பதற்கு காரணம் என்று பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மெர்டேக்கா சென்டர் நடத்திய ஆய்வில் பக்காத்தான் அரசாங்கம் மீதான ஆதரவு சரிவு கண்டிருப்பதை ஒப்புக் கொண்ட அவர், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கத்தின் மீது மக்கள் அதிக எதிர்பார்ப்புகளை கொண்டிருந்தனர்.
ஆனால் அவர்கள் கூடுதல் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாத சூழலில் மக்களின் ஆதரவு சரிவு கண்டிருக்கிறது.
ஆயினும் இந்த சரிவு இறுதி முடிவு அல்ல. ஆக்ககரமான திட்டங்களீன் வழி மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து அவர்களின் ஆதரவை பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கம் பெறும் என்று போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment