ஈப்போ-
மத்திய அரசாங்கம்
பரிந்துரைத்துள்ள அரசு பணியாளர் குறைப்பு நடவடிக்கை 2021ஆம் ஆண்டு முதல் பேராக் மாநிலத்தில்
அமல்படுத்தப்படும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் குறிப்பிட்டார்.
நாடு தழுவிய
நிலையில் தற்போடு அரசு பணியில் உள்ள 1.7 மில்லியன் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும்
நடவடிக்கையாக மாநில அரசு இலாகாக்களிலும் அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதுபோன்ற
ஆட்குறைப்பு நடவடிக்கை புதியது அல்ல என்றும் கடந்த 2015ஆம் ஆண்டிலேயே ஆட்குறைப்பு நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.
அரசு துறையை
சீர்படுத்தவும் பணியிடங்களை எண்ணிக்கையை நிலைநிறுத்தவும், பணியிடங்களை மறுசீரமைப்பு
செய்யவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தற்போது சேவையாற்றி
வரும் பணியாளர்கள் இதில் உள்ளடங்க மாட்டார்கள் எனவும் தற்காலிக பணியமர்த்தும் முறை
தளர்த்தப்படுவதோடு ஈராண்டு அடிப்படையிலான பணி
ஒப்பந்தம் நீட்டிக்கப்படாது என்றும் அவர் சொன்னார்.
ஊத்தான் மெலிந்தாங்
சட்டமன்ற உறுப்பினர் டத்தோ கைருட்டின் தர்மிஸி (தேமு) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்
அவர் இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment