கோவிட்-19 வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் இனி அந்நியத் தொழிலாளர்கள் மூன்று துறைகளில் மட்டுமே பணி புரிவதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
கட்டுமானம்,விவசாயம், தோட்டத்துறை ஆகியவற்றில் மட்டுமே அந்நியத் தொழிலாளர்கள் பணியாற்ற அரசாங்கம் அனுமதிக்கிறது என்று மனிதவள துணை அமைச்சர் அவாங் சலாஹுடின் தெரிவித்தார்.
ஏனைய துறைகளில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறைக்கு உள்ளூர் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும்.
தற்போது நாட்டில் அந்நியத் தொழிலாளர்கள் உற்பத்தி, சேவை துறைகளில் பெருமளவு பணியாற்றி வருகின்றனர் என்று அவர் சொன்னார்.
No comments:
Post a Comment