Monday 6 July 2020

திடீர் தேர்தல்; பிஎச் மாநில அரசுகள் கலைக்கப்படாது

கோலாலம்பூர்-
திடீர் தேர்தல் நடத்தப்படுவதற்கு ஏதுவாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் ஐந்தாண்டுகால தவணை முடிவு பெறுவதற்கு முன்னதாக பக்காத்தான் ஹராப்பான் ஆளும் மாநில அரசு கலைக்கப்படாது என்து பிஎச் தலைமைத்துவ மன்றம் முடிவெடுத்துள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு எந்நேரத்திலும் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் வேளையில் பிஎச் வசமுள்ள மாநில அரசுகள் தங்களின் ஐந்தாண்டு கால தவணை பூர்த்தி செய்யப்படாமல் கலைக்கப்படாது என எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தில் பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா கட்சியின் தலைவர் மாட் சாபு, டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

தற்போது பிஎச் கூட்டணி வசம் சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்கள் மட்டுமே உள்ளன.

No comments:

Post a Comment