Wednesday 1 July 2020

22 மாத கால ஆட்சியில் இந்தியர்களுக்கு ஆற்றிய பங்கு என்ன? பேரா எம்பி-ஐ நோக்கி எழும் கேள்விகள்

ரா.தங்கமணி

ஈப்போ-
பெரிக்காத்தான் நேஷனல்  மத்திய அரசாங்கத்தை கடந்த பிப்ரவரி மாதம் கைப்பற்றிய பின்னர்  தேசிய முன்னணி, பாஸ், பெர்சத்து ஆகிய கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பேரா மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியை கவிழ்த்து பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் அமைத்தது. 

இந்த கூட்டனியில் உள்ள அம்னோ, பாஸ் மற்றும் பெர்சாத்து போன்ற கட்சிகளுக்கு மாநில அரசாங்கப் பதவிகள் வழங்கப்பட்ட வேளையில் தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் மஇகாவிற்கு  இதுவரையில் மாநில அரசாங்கப் பதவிகள் வழங்கப்படவில்லை. 

தற்போது மாநில  மந்திரி பெசாராக பதவி வகிக்கும் டத்தோ ஸ்ரீ பைசால் அஸுமு, தாமே மாநிலத்திலுள்ள இந்தியர் விவகாரங்களை கவனித்து கொள்போவதாக இன்றைய தமிழ் நாளேட்டில் வெளியான செய்தியை கண்டு  அதிர்ச்சி அடைந்த சமூக இயக்க பிரதிநிதிகள் இந்திய சமுதாயத்திற்கு  மாநில  மந்திரி பெசார் பிரதிநிதியா? என்று வியந்து நிற்கின்றனர்.

அப்படியென்றால் இந்தியர்களின் தாய்க்கட்சி என்று சொல்கின்ற மஇகாவின் பிரதிநிதித்துவம்? வெறும் கானல்நீர் தானா? என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் வென்ற பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் ஆட்சி அமைத்த 22 மாதங்களில் மந்திரி பெசாராக பதவி வகித்த டத்தோஶ்ரீ  அஸுமு,  அப்பதவியில் இருந்து கொண்டு இந்திய சமுதாயத்திற்கு செய்த சேவைகள் என்ன? பிஎன் கூட்டணி ஆட்சி அமைத்த இந்த 4 மாதங்களில் ஆற்றிய பங்களிப்புதான் என்ன?

கடந்த 2008, 2013ஆம் ஆண்டு தேர்தல்களில் தேசிய முன்னணி ஆட்சியின்போது  மஇகா எவ்வித சட்டமன்றத் தொகுதிகளையும் பெற்றிராத நிலையிலும் சபாநாயகர், சிறப்பு ஆலோசகர், சிறப்பு அதிகாரி ஆகிய பதவிகளை வழங்கி இந்திய சமுதாயத்திற்கு சேவையாற்ற வழிவகுத்தது.

அப்பதவிகளின் மூலம் இந்தியர்கள் சம்பந்தப்பட்ட ஆலயம், தமிழ்ப்பள்ளி, கல்வி நிதியுதவி, தொழில்துறை, சமூக நலன் போன்ற  பிரச்சினைகளுக்கு மஇகா தீர்வு கண்டதை மறுக்க முடியாது.

இப்பிரச்சினைகள் எல்லாம் தமது நேரடி பார்வையில் தீர்க்கப்படும் என்ற டத்தோஶ்ரீ அஸுமு பைசால், ஒரு குதிரையில் இரட்டை சவாரி செய்யக்கூடாது என்பதை உணர்ந்து இந்தியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மஇகாவை  பிரதிநிதிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் பொது இயக்கப் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment