ரா.தங்கமணி
போர்ட்டிக்சன் -
போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் களகிறங்கியுள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெற்றிக்காக மிலேசிய இந்தியர் குரல் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது என்று அதன் ஆலோசகர் ராயுடு கூறினார்.
ஹிண்டாஃப் அமைப்பின் மறு வடிவமான மலேசிய இந்தியர் குரல் தேசிய முன்னணி, அம்னோ ஆகியவற்றை எதிரியாக கருதி எதிர்த்து வருகிறது.
மலேசிய இந்தியர் குரல் இயக்கத்தின் நோக்கமே தேமுவை தோல்வி அடையச் செய்வதுதான்.
அதற்கேற்ப போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலிலும் தேமுவின் தோல்வியை உறுதி செய்யும் வகையில் டத்தோஸ்ரீ அன்வாருக்கு ஆதரவாக மலேசியர் இந்தியர் குரல் களமிறங்கியுள்ளது.
போர்ட்டிக்சன் வாக்காளர்களைச் சந்தித்து டத்தோஸ்ரீ அன்வாரின் வெற்றிக்காக ஆதரவு திரட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்திய சமுதாயத்தின் ஆதரவு டத்தோஸ்ரீ அன்வாருக்கு கிடைப்பதில் முழு மூச்சாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று அவர் சொன்னார்.
No comments:
Post a Comment