Saturday 20 October 2018
ஜீவி பிரகாஷ் கலைநிகழ்சசியை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வருகிறது ஆஸ்ட்ரோ
கோலாலம்பூர்-
இவ்வாண்டு தீபாவளி கொண்டாடத்தை இன்னும் மெருகூட்டும் வகையில் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்காக உள்ளூர் மற்றும் வெளியூர் நிகழ்ச்சிகளுடன் ராகா, ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்தில் பல சிறப்பு தீபாவளி நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழலாம். திரைப்படங்கள், நாடகங்கள், இசை கலைநிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை ஆஸ்ட்ரோவின் ஆன் டிமாண்ட, ஆஸ்ட்ரோ கோ, என்ஜோய், என்ஜோய் செயலி வாயிலாக கண்டு களிக்கலாம்.
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜீ தமிழ் எச்.டி (அலைவரிசை 232) மற்றும் கலர்ஸ் தமிழ் எச்.டி (அலைவரிசை 233) நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்க சாம்ராட் பேக் சந்தாதாரராகி எதிர்வரும் அக்டோபர் 28-ஆம் தேதி ஷா ஆலாம் மெலாவத்தி அரங்கத்தில் நடைபெறவுள்ள ஜீவி பிரகாஷ் கலைநிகழ்ச்சிக்கான பிரத்தியோக நுழைவுச் சீட்டுகளைப் பெற்று கொள்ளலாம். அக்டோபர் 20ஆம் தேதிக்குள் அலைவரிசை 200 அணுகி சாம்ராட் பேக் சந்தாதாரராகி இந்நுழைவுச் சீட்டுகளைப் பெறலாம். சாம்ராட் பேக் குறித்த மேல் விவரங்களுக்கு www.astroulagam.com.my/samrat அகப்பக்கத்தை வலம் வரலாம்.
இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு ஆஸ்ட்ரோ வானவில், ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை, ஆஸ்ட்ரோ தங்கத்திரை, ஆஸ்ட்ரோ விண்மீன் எச்.டி, தாரா எச்.டி, போலிஒன் எச்.டி போன்ற அலைவரிசை பல்வகை அசத்தலான நிகழ்ச்சிகளைக் கொண்டு வரவுள்ளது.
ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)
• அருண் விஜய் உடன் தீபாவளி கொண்டாட்டம், ராஜா vs ரஹ்மான், வெவ்வேறு ரூபம், தீபாவளிக்கு உங்களுக்குப் பிடிச்ச மாதிரி ராகா, பிருந்தாவனத்தில் கண்ணன் மற்றும் வசந்த விலாஸ்.
ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை (அலைவரிசை 202)
• நடிகையர் திலகம், மெரசல், யு டர்ன், வேலாயுதம், பிரம்மாண்ட் நாயகன், வேல் போன்ற திரைப்படங்கள்.
ஆஸ்ட்ரோ தங்கத்திரை (அலைவரிசை 241), ஆன் டிமாண்ட்
• கஜினிகாந்த் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை ஆஸ்ட்ரோ தங்கத்திரையில் காணலாம்.
• ஆன் டிமாண்டில் பாஸ்கர் ஒரு ராஸ்கல், வேலைக்காரன், திருட்டு பயலே.
ஆஸ்ட்ரோ விண்மீன் எச்.டி (அலைவரிசை 231)
• இரும்புத் திரை, காலா, பரத் எனும் நான், பாகமதி, பெட்டிக்குள் என்ன சீசன் 3, One Heart: AR. Rahman மற்றும் மொஜோ கலைநிகழ்ச்சி
ஆஸ்ட்ரோ தாரா எச்.டி (அலைவரிசை 108)
• ஷாரு கான் நடிப்பில் வெளிவந்த Kabhi Kushi Kabhie Gham, Kuch Kuch Hota Hai, Kabhi Alvida Naa Kehna, Duplicate மற்றும் Kal Ho Naa Ho
ஆஸ்ட்ரோ போலிஒன் எச்.டி (அலைவரிசை 251)
• Padman மற்றும் Veere Di Wedding எனும் திரைப்படங்களைக் கண்டு களிக்கலாம்.
ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்தில் ‘நம்ம தீபாவளி’ www.astroulagam.com.my/NammaDeepavali எனும் பிரத்தியோகமான மைக்ரோசைட் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திரைப்பட கலைஞர்களின் நேர்காணல்கள், தீபாவளி பலக்காரங்கள் செய்யும் வழிமுறைகள் என பல தகவல்கள் இந்த அகப்பக்கத்தில் பெற்று கொள்ளலாம்.
இதைத் தவிர்த்து, முதல் முறையாக ராகா 5 அத்தியாயங்கள் கொண்ட வானொலி நாடகத்தை தயாரித்துள்ளார்கள். இந்நாடகம் எதிர்வரும் அக்டோபர் 29-ஆம் தேதி தொடக்கம் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை ஒலியேறும். அதுமட்டுமின்றி, ஜெய் இசைமைப்பில் ராகாவின் அறிவிப்பாளர்கள் பாடிய தீபாவளி பாடலும் விரைவில் ராகாவின் அதிகாரப்பூர்வ சமூக வளத்தளங்களில் வெளியிடப்படவுள்ளது.
மேல் விவரங்களுக்கு www.raaga.my அல்லது www.astroulagam.com.my அகப்பக்கத்தை வலம் வருங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment