Monday 29 October 2018
நிதி முறைகேட்டில் மஇகாவினரா? விசாரணை மேற்கொள்ளலாம் - டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்
ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
தேசிய முன்னணி தலைவர்கள் மீதான நிதி முறைகேடு தொடர்பான விசாரணை மஇகா தலைவர்களிடமும் மேற்கொள்ளப்படும் என்றால் தாராளமாக விசாரணை மேற்கொள்ளலாம் என்று அதன் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் யார் மீது வேண்டுமானாலும் விசாரணை மேற்கொள்ளலாம். குற்றம் புரிந்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
மஇகாவின் தலைவர்கள் யார் நிதி முறைகேட்டில் ஈடுபட்டிருந்தாலும் விசாரணை மேற்கொள்ளலாம். முன்பு ம இகாவினர் மீது பல்வேறு நிதி மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
ஆனால், மஇகா மீது குற்றம் சுமத்தியவர்கள் இன்று ஆளும் கட்சியின் பிரதிநிதியாக உள்ள சூழலில் மஇகாவினர் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு இன்று வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
மஇகாவினர் யாரும் நிதி முறைகேட்டில் ஈடுபடவில்லை என கட்சி தலைமைத்துவம் நம்புவதாகவும் அவ்வாறு நிதி முறைகேட்டில் ஈடுபட்டிருந்தால் எம்ஏசிசி விசாரணைக்கு ஒருபோதும் தடையாக இருக்க மாட்டோம் என்றும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment