Thursday 11 October 2018
கட்சி நலன் காக்கவே போட்டியிடுகிறேன் - டான்ஶ்ரீ ராமசாமி
ரா.தங்கமணி, படம்: கினேஷ் ஜி
கோலாலம்பூர்-
கட்சி நலன் பாதுகாக்கப்படவே மஇகா தேசிய துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவெடுத்ததாக தொழிலதிபர் டான்ஶ்ரீ எம்.ராமசாமி தெரிவித்தார்.
வருங்காலத்தில் கட்சி நலன் பாதுகாக்கப்படவும் அதனை வலுபடுத்தவும் வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அதனை மனதில் நிறுத்தியே இப்பதவிக்கு போட்டியிட முனைந்தேன்.
இம்முடிவு திடீரென எடுக்கப்பட்டது. ஆனாலும் எனக்கான ஆதரவை கட்சி உறுப்பினர்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் நிச்சய மஇகாவை வலுபடுத்துவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று இன்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment