நடிகர், நடிகைகளை வைதத்து தங்களது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் இந்தியாவின் அரசியல் கலாச்சாரம் தற்போது மலேசிய அரசியலிலும் ஊடுருவியுள்ளது.
வரும் 13ஆம் தேதி நடைபெறவுள்ள போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் ஆளும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வேட்பாளராக பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் போட்டியிடுகிறார்.
டத்தோஸ்ரீ அன்வாருக்கு ஆதரவாக தமிழ்த் திரைப்பட நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் பிரச்சாரம் செய்யும் வீடியோ காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர்களை தங்களின் அரசியல் பிரச்சார பீரங்கியாக பயன்படுத்தும் இந்திய கலாச்சாரம் தற்போது மலேசிய அரசியலிலும் ஊடுருவியுள்ளது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் பல்வேறு விமர்சனங்களையும் எழுப்பி வருகிறது.
No comments:
Post a Comment