Friday 26 October 2018

சீபில்ட் ஆலயம் உடைபடுமா? வாக்குவாதம் முற்றுகிறது

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
ஹைகோம் (சீபில்ட்)  ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் இன்று உடைபடலாம் என்ற தகவல் பரவியதைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

நீதிமன்ற ஆணைக்கு ஏற்ப ஆலயத்தை இடமாற்றம் அங்கீகரிக்கப்பட்ட அணியினர் என கூறப்படும் செல்லப்பா அணியினரும் ஓன் சிட்டி மேம்பாட்டு நிறுவனமும் நடவடிக்கையை முன்னெடுக்கும்போது ஆலயத்தின் மற்றொரு தரப்பான நாகப்பா அணியினர் ஆலயம் உடைக்கக்கூடாது என போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இவ்வாலயம் உடைக்கப்படவில்லை; இடமாற்றம் மட்டுமே என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறியுள்ள போதிலும் இந்த ஆலயத்தை உடைக்க விடமாட்டோம் என்று நாகப்பா அணியினருடன் கைகோர்த்துள்ள மஇகாவினரும் பொது இயக்கத்தினரும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆலய வளாகத்தில் இன்று காலை போலீசார், எப்ஆர்யூ குவிக்கப்பட்ட வேளையில் இரு அணியினருக்கும் மத்தியில் காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இச்செய்தி பதிவேற்றம் செய்யப்படும் வரை ஆலயம் உடைக்கப்படவில்லை என்ற போதிலும் ஆலயம் எந்நேரத்திலும் உடைபடலாம் என்ற பதற்றமான சூழலே நிலவுகிறது.

தற்போது ஆலயம் வீற்றிருக்கும் நிலத்தை ஓன் சிட்டி மேம்பாட்டு நிறுவனம் வாங்கியுள்ள நிலையில் ஆலயத்தை இடமாற்றம் செய்வதற்கு யுஎஸ்ஜே  23இல்  ஒரு ஏக்கர் நிலமும் 15 லட்சம் வெள்ளியும் வழங்கப்பட்டு புதிய ஆலயம் நிர்மாணிக்கப்பட்டு விட்டது.

No comments:

Post a Comment