Sunday 7 October 2018

அன்வாருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இறங்கினார் கோபிந்த் சிங்


போர்ட்டிக்சன்-

போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக களமிறங்கியுள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்  பூச்சோங் நாடாளுமன்ற  உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ.

கூட்டணி இடம்பெற்றுள்ள கட்சியின் பிரதிநிதி என்ற அடிப்படையிலேயே பிரச்சாரம் மேற்கொள்வதாகவும் ஓர் அமைச்சர் என்ற நிலையில் அல்ல என்று அவர்.

நட்பின் அடிப்படையில் இங்கு பிரச்சாரம் மேற்கொள்வதாகவும் பதவி அதிகாரத்தைக் கொண்டு இங்கு களமிறங்கவில்லை என்று தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சருமான அவர் தெரிவித்தார்.

ஏழு முனைப்போட்டியை ஏற்படுத்தியுள்ள இந்த இடைத் தேர்தல் வரும் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment